தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் எல்லை தாண்ட கூடாது!குழு அமைத்து வருவாய்துறையினர் கண்காணிப்பு

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் எல்லை தாண்ட கூடாது!குழு அமைத்து வருவாய்துறையினர் கண்காணிப்பு

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் எல்லை தாண்ட கூடாது!குழு அமைத்து வருவாய்துறையினர் கண்காணிப்பு


UPDATED : ஆக 06, 2026 09:47 PM

ADDED : ஆக 06, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 09:47 PM ADDED : ஆக 06, 2026 06:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல அரசு தடை விதிக்கப்பட்டதையடுத்து, தமிழக - கேரளா எல்லையில், வருவாய்துறை அதிகாரிகள் குழு அமைத்து கண்காணிக்க சப் - கலெக்டர் உத்தரவிட்டார்.

கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 60 கிரஷர், குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு இருந்து, கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும்.

கனிமவளத்துறை அதிகாரிகள் வாயிலாக உரிய அனுமதி கடிதம், குறிப்பிட்ட பாரத்துடன் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12 வீல் லாரியாக இருந்தால், ஆறு யூனிட், 14 வீல் லாரியில் 8 யூனிட், 16 வீல் லாரியில் 10 யூனிட் வரை எடுத்துச் செல்லலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.

செமணாம்பதி, கோவிந்தாபுரம், கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி, வாளையார் உள்ளிட்ட தமிழக - கேரளா எல்லை சோதனைச்சாவடிகள் வழியாக லாரிகள் இயக்கப்படுகின்றன.

அ.தி.மு.க., ஆட்சியில், குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் எடுத்துச் செல்ல ஆளுங்கட்சியினருக்கு 'கப்பம்' கட்டி எடுத்துச் செல்லும் நிலை இருந்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில், ஆளும்கட்சியினர் ஆட்களை நியமித்து, ஒரு யூனிட்டுக்கு, 400 ரூபாய் வீதம் லஞ்சம் வசூலித்தனர். இது குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்றதும், கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விதிமுறை மீறி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க, சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி உத்தரவிட்டுள்ளார்.

வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலத்துக்குள் கனிமங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்கத் தோண்டுதல், கனிமங்களின் போக்குவரத்தை தடுக்கவும், புதுச்சேரி ஒன்றியப்பிரதேசத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை தவிர்த்து, பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், அதன் உபரி பொருட்களை எடுத்துச் செல்ல மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவுக்கு சாதாரண கற்கள் மற்றும் அதன் உபரி பொருட்களை எடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள சப் - கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட கோபாலபுரம், நடுப்புணி, வடக்குக்காடு, வீரப்பகவுண்டனுார், மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோவிந்தாபுரம் உள்ளிட்ட ஏழு சோதனைச்சாவடிகளில், இரண்டு வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பின் போது, விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து, எப்.ஐ.ஆர்., உடன் அறிக்கை வழங்க வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்படாதபட்சத்தில், விதிமீறல்கள் ஏதும் இல்லை என்ற அறிக்கை வாரந்தோறும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us