/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடையில் எலியாரை அண்ட விடாதீங்க... ரேஷன் பணியாளருக்கு 'அட்வைஸ்'
/
கடையில் எலியாரை அண்ட விடாதீங்க... ரேஷன் பணியாளருக்கு 'அட்வைஸ்'
கடையில் எலியாரை அண்ட விடாதீங்க... ரேஷன் பணியாளருக்கு 'அட்வைஸ்'
கடையில் எலியாரை அண்ட விடாதீங்க... ரேஷன் பணியாளருக்கு 'அட்வைஸ்'
ADDED : பிப் 14, 2024 11:01 PM
உடுமலை, - உணவு பொருட்களை பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் இருப்பு வைக்க, ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், ரேஷன் விற்பனையாளர் மற்றும் 'டாஸ்மாக்' மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கவேல், ரவி முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், 'டாஸ்மாக்' மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர். உணவு பாதுகாப்பு அலுவலர் ரகுநாதன், உணவு பொருட்களை கையாளும் முறை, இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை குறித்து பயிற்சி அளித்தார்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பேசியதாவது: ரேஷன் கடைகளில், உணவு பொருட்களை, எலி, பூச்சி தாக்காத வகையில் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் இருப்பு வைக்க வேண்டும். உணவுப்பொருட்களை சுவரை ஒட்டி வைத்தால், ஈரப்பதம் காரணமாக பூஞ்சை உருவாக வாய்ப்பு உள்ளது.
அரசுத்துறை சார்ந்த உணவு கையாளும் அனைத்து நிறுவனங்களுக்கும், உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி பெற்ற அனைவரும், அறிவுரைகளை செயல்படுத்தி, நுகர்வோருக்கு தரமான உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

