sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'ஜாக்பாட்' வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க; இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி

/

 'ஜாக்பாட்' வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க; இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி

 'ஜாக்பாட்' வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க; இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி

 'ஜாக்பாட்' வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க; இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி


UPDATED : பிப் 19, 2026 06:57 AM

ADDED : பிப் 19, 2026 05:53 AM

Google News

UPDATED : பிப் 19, 2026 06:57 AM ADDED : பிப் 19, 2026 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: கட்டுமான தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உட்பட 40 வகையான நவீன தொழில்நுட்ப இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி, இலவசமாக வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், நகர் மற்றும் ஊரக பகுதிகளில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் நலனுக்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு, 40 வகையான நவீன தொழில்நுட்ப இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் பாலதண்டாயுதம் கூறியதாவது:-

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின், உயர் கல்வி உதவித்தொகை பெறும் குழந்தைகளுக்கு, கல்லுாரியில் படிக்கும் போது திறனை மேம்படுத்தி வேலை வாய்ப்பு பெறும் வகையில், 10 ஆயிரம் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில், இளநிலை மென்பொருள் உருவாக்குதல், ஏ.ஐ., தொழில்நுட்பம், பைத்தான், வெப் டெவலப்பெண்ட், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேனேஜர், க்ளவுட் அப்ளிகேஷன் டெவலப்பர், ரோபோடிக் பிராசஸ், ஆட்டோமேசன் பயிற்சி உட்பட 40 வகையிலான நவீன தொழில்நுட்ப இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி, இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மாணவர்கள் வீட்டிலிருந்தோ அல்லது கல்லுாரி விடுதியிலிருந்தோ, ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாயிலாக பயிலலாம்.

பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் முறையான பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ., போன்ற உயர்கல்வி பயில்வதற்கான உதவித்தொகை, நடப்பாண்டில் பெற்றிருக்க வேண்டும் அல்லது உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளரின் இரண்டு குழந்தைகள் மட்டும் பயன் பெற முடியும்.

கலந்து கொள்ள விரும்பும் தொழிலாளர்களின் https://registration.tnbocw.com/application என்ற இணைய முகவரியில் சென்று, தங்களுக்கு விரும்பம் உள்ள ஏதேனும் ஒரு பிரிவை பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சி வகுப்பு, 6 மாத காலம் வரை நடைபெறும்.

பயிற்சி முடித்த பின் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ், வேலைவாய்ப்பிற்கு பெரிதும் பயன்படும் வகையில் இருக்கும். விபரங்களுக்கு, கோவை ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.--






      Dinamalar
      Follow us