ADDED : செப் 26, 2026 03:56 AM
மேட்டுப்பாளையம்: 'பாம்புகள் மற்றும் வனவிலங்குகள் ஏதேனும் குடியிருப்புகளுக்கு வந்தால், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில், கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் சிறுமுகை வனச்சரகங்கள் உள்ளன.
வனச்சரகங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள், வீடுகள், தோட்டங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் பாம்புகள் மற்றும் வனவிலங்குகள் ஏதேனும் வந்தால், வனஉயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, பாதுகாப்பாக அப்புறப்படுத்த, வனத்துறை அல்லது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் கூறுகையில், ''பாம்புகள் வராமல் இருக்க, வீட்டை சுற்றியுள்ள புற்கள் மற்றும் செடிகளை உயரமாக வளரவிடாமல் தரை தெரியும்படி வெட்டி பராமரிக்க வேண்டும்.
கற்கள், பழைய மரக்கட்டைகள், குப்பைகள் மற்றும் உடைந்த பொருட்களை வீட்டின் அருகில் குவித்து வைக்கக் கூடாது; இவை பாம்புகளின் தங்குமிடமாக மாறிவிடும்.
மேட்டுப்பாளையம் பகுதியில் பாம்புகள் வந்தால், 89258 72070,89258 72081 என்ற எண்ணுக்கும், காரமடை 89258 72542, சிறுமுகை, 89258 73148, கோவை மாவட்ட வனத்துறை அவசர உதவி எண்:1800 - 4257 - 5456, மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, 04254-222299,7305095761, தீயணைப்பு துறை அவசர உதவி எண்-112, ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.----
