sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை விழாவுக்கு வந்த டபுள் டக்கர் பஸ்கள்; கோவைக்குள் செல்லலாம் 'ஜாலி ரவுண்ட்அப்'

/

கோவை விழாவுக்கு வந்த டபுள் டக்கர் பஸ்கள்; கோவைக்குள் செல்லலாம் 'ஜாலி ரவுண்ட்அப்'

கோவை விழாவுக்கு வந்த டபுள் டக்கர் பஸ்கள்; கோவைக்குள் செல்லலாம் 'ஜாலி ரவுண்ட்அப்'

கோவை விழாவுக்கு வந்த டபுள் டக்கர் பஸ்கள்; கோவைக்குள் செல்லலாம் 'ஜாலி ரவுண்ட்அப்'


ADDED : நவ 14, 2024 11:23 PM

Google News

ADDED : நவ 14, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ; கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை மாநகரை சுற்றிப்பார்க்க டபுள் டக்கர் பஸ் சேவை நேற்று துவங்கப்பட்டது.

கோவை விழாவின், 17 வது பதிப்பின் ஒரு பகுதியாக கோவை விழா நவ., 23 முதல் டிச., 1 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரை சுற்றிப்பார்க்க டபுள் டக்கர் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவை வ.உ.சி., பூங்காவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், டபுள் டக்கர் பஸ்கள் துவக்கி வைக்கப்பட்டன.

கோவை கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் பஸ்களை துவக்கி வைத்தனர்.

நவ., 24 முதல் டிச., 1 வரை முன்பதிவு செய்து கோவையை சுற்றிப்பார்க்கலாம்.

டபுள் டக்கர் பஸ்ஸில் இலவசமாக பயணம் செய்யலாம். இப்பேருந்து வ.உ.சி., பார்க் முதல் சத்தி ரோட்டில் உள்ள டெக்ஸ்டூல் பாலம் வரை, வ.உ.சி., பார்க் முதல் கிராஸ் கட் ரோடு மற்றும், 100 அடி ரோடு வரை, வ.உ.சி., பார்க் மற்றும் சுகுணா திருமண மண்டபம், அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயில் முதல் கிருஷ்ணா காலனி வரை, பொது மருத்துவமனை முதல் வெங்கடலட்சுமி மண்டபம் வரை, கொடிசியா முதல் விமான நிலையம் வரை, திருச்சி ரோடு மேம்பாலம் முதல் வாலாங்குளம் ஏரி வரை, துடியலூர் கே.பி.என்., ஆகியவற்றுக்கு இடையே பஸ் இயக்கப்படுகிறது.

இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரு பஸ்களிலும் தலா, 36 இருக்கை உள்ளன.

வழித்தடம் மற்றும் நேரங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் பிரத்யேக மொபைல் செயலி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

டபுள் டக்கர் பேருந்து பயணத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் www.coimbatorevizha.theticket9.comல் பதிவு செய்யலாம். முன்பதிவுகளுக்கு 70107 08031 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்

கோவை விழாவின் 17வது பதிப்பு, நவ., 23 முதல் டிச., 1 வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை விழா மராத்தான், கோவை தினத்தை முன்னிட்டு நவ., 24ம் தேதி நடக்கிறது. இந்தாண்டு மராத்தான் உடற்தகுதி மட்டுமல்ல, அர்த்தமுள்ள அறிக்கையை வெளியிடுவதும் ஆகும். ''வாழ்க்கைக்கு ஆம், போதைப்பொருட்களுக்கு இல்லை'' என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு ஆரோக்கியத்தையும் மற்றும் போதைப்பொருள் இல்லாத கோயம்புத்தூரை வலியுறுத்துகிறது. பங் கேற்பாளர்கள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுப்பர். 2.5 கி.மீ., பேமிலி ரன், 2.5 கி.மீ., வாக்கத் தான், 5 கி.மீ., 10 கி.மீ., அல்லது 15 கி.மீ., டைம்ட் ரன்னில் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு ரூ.3.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. மராத்தானை தினமலர் நாளிதழ் இணைந்து வழங்குகிறது. முன்பதிவுக்கு https://www.theticket9.com/event/coimbatore-vizha-marathon என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். மேலும், விபரங்களுக்கு, 96005 74888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.








      Dinamalar
      Follow us