/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு; புதிதாக 459 ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு; புதிதாக 459 ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு; புதிதாக 459 ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு; புதிதாக 459 ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு
ADDED : செப் 18, 2025 10:21 PM

கோவை; கோவை மாவட்ட அளவில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தற்போதுள்ள 3,117 ஓட்டுச்சாவடிகளுக்கான வரைவு பட்டியலை, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், கலெக்டர் பவன்குமார் வெளியிட்டார். அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியில் 1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கும் பட்சத்தில், அதை பிரித்து புதிதாக ஓட்டுச்சாவடி அமைக்கவும், புதிதாக உருவாக்க உள்ள ஓட்டுச்சாவடி குறித்தும், ஓட்டுச்சாவடிகளை இட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்வது குறித்தும் அரசியல் கட்சியினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் 1,200க்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 950, புதிதாக பிரிக்கப்பட உள்ளவை 459, மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டியவை 425, இடமாற்றத்துக்கானவை 37, கட்டட மாற்றம் செய்யப்பட உள்ளவை 47, பெயர் மாற்றத்துக்கானவை 5 என்று அறிவிக்கப்பட்டது.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை ஒட்டி, ஓட்டுச்சாவடி சீரமைப்பு பணிகள், அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கலெக்டர் கூறினார்.
முன்னதாக, கோவை தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையின் உட்புறம் மற்றும் வெளிப்புற தன்மை பாதுகாப்பு குறித்த காலாண்டு ஆய்வை கலெக்டர் மேற்கொண்டார்.