/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனவு இல்லம் திட்டத்தில் புறக்கணிப்பு; நத்தம் நிலத்தில் குடியிருப்போர் அதிருப்தி
/
கனவு இல்லம் திட்டத்தில் புறக்கணிப்பு; நத்தம் நிலத்தில் குடியிருப்போர் அதிருப்தி
கனவு இல்லம் திட்டத்தில் புறக்கணிப்பு; நத்தம் நிலத்தில் குடியிருப்போர் அதிருப்தி
கனவு இல்லம் திட்டத்தில் புறக்கணிப்பு; நத்தம் நிலத்தில் குடியிருப்போர் அதிருப்தி
ADDED : ஜன 28, 2025 11:43 PM
அன்னுார்; நத்தம் நிலத்தில் குடியிருப்போர் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்படாததால் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு 2023ம் ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 360 சதுர அடியில் வீடு கட்ட, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இதில் ஆய்வு செய்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் வடக்கலுார் ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், 'வடக்கலுார், மூக்கனூர், புள்ளாமடை, போயனுார் பகுதியில் வீடு கட்ட சிறிதளவு சொந்த இடம் மட்டும் உள்ள குடும்பங்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதால் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இந்நிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்காக ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நத்தம் நிலத்தில் சொந்த இடம் உள்ளவர்கள் இதில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துவிட்டனர். எங்களுக்கு எங்கும் சொந்த வீடு இல்லை. நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோம். அதற்கான பட்டியலில் எங்கள் பெயர் இடம் பெற்றுள்ளது என்று கூறியும் அதிகாரிகள் எங்களை தேர்வு செய்யவில்லை.
சொந்த வீடு கோரி அரசிடம் 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் தற்போது திட்டம் செயல்பாட்டுக்கு வந்து பயனாளிகளாக தேர்வு செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. நத்தம் நிலத்தில் இடம் உள்ளோரையும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்ய வேண்டும்,' என்றனர்.