sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீர், இருக்கை, சுகாதாரம்... எதுவுமே இல்லை; பஸ் ஸ்டாண்ட் நிலையோ படுமோசம்.. கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்

/

குடிநீர், இருக்கை, சுகாதாரம்... எதுவுமே இல்லை; பஸ் ஸ்டாண்ட் நிலையோ படுமோசம்.. கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்

குடிநீர், இருக்கை, சுகாதாரம்... எதுவுமே இல்லை; பஸ் ஸ்டாண்ட் நிலையோ படுமோசம்.. கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்

குடிநீர், இருக்கை, சுகாதாரம்... எதுவுமே இல்லை; பஸ் ஸ்டாண்ட் நிலையோ படுமோசம்.. கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்


ADDED : மார் 05, 2025 10:24 PM

Google News

ADDED : மார் 05, 2025 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து வரும் மக்கள், பஸ் ஸ்டாண்டுக்கு தான் வருகின்றனர். அங்கு வசதிகள் இல்லாவிட்டால் மக்களின் பாடு திண்டாட்டமாக இருக்கும்.

பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் காட்சிப்பொருளாக உள்ளது. பின்பகுதியில் குப்பையை குவித்துள்ளதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், மக்கள் நின்றபடியும், படிக்கட்டுகளில் அமர்ந்தும் காத்திருக்கும் நிலை உள்ளது.

பழைய பஸ் ஸ்டாண்டில், இருசக்கர வாகனங்கள், பஸ் ஸ்டாண்டுக்குள்ளே ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. பஸ்கள் நிறுத்தம் செய்யும் பகுதியிலும் வாகனங்களை நிறுத்துவதால், பஸ்கள் நிறுத்துவதில் இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து போலீசார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் சுரங்க பாதையில், சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். மேலும், சுகாதாரமின்றியும், பாதுகாப்பு இன்றியும் உள்ளதால், மக்கள் பயன்படுத்த தயங்குகின்றனர்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்று, நகராட்சி நிர்வாகமும், நகரத்தின் சுகாதாரமும் பஸ் ஸ்டாண்டை பார்த்தாலே புரிந்து விடும். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட்களை சுகாதாரமாகவும், துாய்மையாகவும் பராமரித்து, அனைத்து வசதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை, நகராட்சிக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.

உடுமலை


உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, கோவை, திருப்பூர், பழநி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களுக்கும், 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்துகின்றனர். ஆனால், பயணியருக்கான அடிப்படை வசதிகள் இல்லை.

கோவை, பழநி, வால்பாறை, மூணாறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில், பயணியர் அமர இருக்கை இல்லாமலும், இருக்கும் இருக்கைகள் உடைந்தும், சுகாதார கேடுகளுடன் காணப்படுகிறது. பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அலட்சியமாக இருப்பதால், பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு


உடுமலை பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்திலுள்ள கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. தற்காலிக கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகள் அதிகளவில் இருப்பதால், பஸ் ஸ்டாண்ட் வளாகம், கடை வீதி போன்று காணப்படுகிறது.

ஒரே கட்டண கழிப்பிடம் மட்டுமே உள்ளது. குடிநீர் வசதியும் இல்லை; இருக்கும் குடிநீர் தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளும் பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது.

கடைகளிலிருந்து, உணவுக்கழிவுகள், எச்சில் இலைகள் மற்றும் கழிவு நீர் நேரடியாக, பஸ் ஸ்டாண்டிற்குள் வெளியேற்றப்படுவதால், கழிவு நீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

3 பஸ் ஸ்டாண்ட் இருந்தும்எவ்வித வசதிகளும் இல்லை!

வால்பாறை, நல்லகாத்து பாலம் அருகே, 18 ஆண்டுகளுக்கு முன் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பணிமனையுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ஆனால், நகரில் இருந்து தொலைவில் இருப்பதால், காந்திசிலை வளாகம் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றப்பட்டது. இதனையடுத்து, வெளியூர் பஸ்கள் மட்டும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது.எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் இருந்தும் இயக்கப்படுகிறது. கருமலை, அக்காமலை, வெள்ளமலை போன்ற வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்தும் இயக்கப்படுகிறது. மூன்று பஸ் ஸ்டாண்ட்கள் இருந்தும், எங்குமே அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, பயணியர் அமர இருக்கை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளதால், பயணியர் நிற்கவும், பஸ்கள் சென்று வரவும் இடையூறு ஏற்படுகிறது.மூன்று பஸ் ஸ்டாண்டுகளிலும், குடிநீர், கழிப்பிடம், இருக்கை வசதிகள் ஏற்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, துாய்மையாக பராமரிக்க வேண்டும்.



பெயரளவில் பஸ் ஸ்டாண்ட்

கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் பயணியருக்கு இருக்கை வசதிகள் குறைவாக உள்ளது. பஸ் நிற்கும் ரேக்குகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால், பஸ்கள் நிறுத்த இடையூறு ஏற்படுகிறது.பஸ் ஸ்டாண்டில் தூய்மை பணிகள் மந்தமாக இருப்பதால், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. துருபிடித்த பஸ் ஸ்டாண்ட் பெயர் பலகை, கழிவு நீர் கால்வாய் அருகே குடிநீர் தொட்டி, தூண்களில் போஸ்டர்கள் ஆதிக்கமாக உள்ளது.



இதையும் கவனியுங்க!

உடுமலை புறநகர பகுதிகளான, பெதப்பம்பட்டி, குடிமங்கலம் பகுதியில், பஸ் ஸ்டாப்களில், அடிப்படை வசதிகள் இல்லை. மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டில், மப்சல் பஸ்கள் உள்ளே செல்லாமல் ரோட்டில் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது.போடிபட்டி காமராஜர் நகர் ஸ்டாப் நிழற்கூரை, பெரியகோட்டை சங்கர் நகர், பெதப்பம்பட்டி, ராஜாவூர் பிரிவு, எலையமுத்துார் பிரிவு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நிழற்கூரையை, 'குடி'மகன்கள் ஆக்கிரமிப்பதால், பயணியர் வெளியில் காத்திருக்கின்றனர்.








      Dinamalar
      Follow us