/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாய்க்குள் தவறி விழுந்த டிரைவர் பலி
/
கால்வாய்க்குள் தவறி விழுந்த டிரைவர் பலி
ADDED : ஆக 29, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,; கோவை, அம்மன் குளம், புதிய ஹவுசிங் யூனிட்டில் வசித்து வந்தவர் சக்தி முருகன்,39. ஆட்டோ டிரைவரான இவர், மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். குடியை மறக்க, மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வில் இருந்தார்.
வேலைக்குச் சென்றிருந்த அவரது மனைவி, வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சக்தி முருகனை காணவில்லை.
அக்கம் பக்கத்தில் தேடியபோது, சவுரிபாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய்க்குள் சடலமாக கிடந்தார்.
பீளமேடு போலீசார் விசாரித்தபோது, சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்ததில், அவர் இறந்தது தெரியவந்தது.