/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ்-மினி லாரி மோதல் டிரைவர் பலி;15 பேர் காயம்
/
அரசு பஸ்-மினி லாரி மோதல் டிரைவர் பலி;15 பேர் காயம்
அரசு பஸ்-மினி லாரி மோதல் டிரைவர் பலி;15 பேர் காயம்
அரசு பஸ்-மினி லாரி மோதல் டிரைவர் பலி;15 பேர் காயம்
ADDED : நவ 05, 2025 10:11 PM

அன்னுார்: அன்னுார் அருகே அரசு பஸ்சும், மினி லாரியும் மோதிய விபத்தில் மினி லாரி டிரைவர் பலியானார். 15 பயணிகள் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகே கோட்டைபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சதீஷ்குமார், 25. டிரைவர்.
இவர் நேற்று மாலை கேரளாவில் வாழைக்காய் லோடு இறக்கிவிட்டு மினி லாரியில் புளியம்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டி ருந்தார்.
மாலை 6:00 மணிக்கு அன்னுார் சத்தி சாலையில் அல்லிகுளம் பிரிவு அருகே சத்தியிலிருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ்சும், மினி லாரியும் திடீரென்று மோதிக் கொண்டன.
இதில் மினி லாரி டிரைவர் சதீஷ் குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அரசு பஸ் டிரைவர் ஈஸ்வரமூர்த்தி, 48, உள்பட 15 பேர் காயமடைந்தனர். அன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

