ADDED : டிச 03, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, விபத்தில் டிரைவர் இறந்தது குறித்து, கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த டிரைவர் யுவராஜ்,27. இவர், பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, எதிரே சூளேஸ்வரன்பட்டியில் இருந்து அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யுவராஜை, அப்பகுதி மக்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன டிரைவர் ரமேஷ் என்பவரிடம் விசாரிக்கின்றனர்.