UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 04:14 PM
அ நிறம் | அளவு
கோவை: முதல்வர் விஜய், நாளை கோவை வழியாக திருப்பூர் செல்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சில பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கொடிசியா, பீளமேடு, சிட்ரா, நேரு நகர், ஹோப் கல்லூரி, எஸ்.ஐ.எச்.எஸ்., ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இருகூர், சின்னியம்பாளையம் மற்றும் கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூர், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, சூலூர் ‘ஒய்’ ஜங்ஷன், புதிய பஸ் ஸ்டாண்ட், காங்கேயம்பாளையம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று அதிகாலை 1:00 முதல் அக்.5 காலை 9:00 மணி வரை அமலில் இருக்கும்.
