/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்டியை தாய் யானையுடன் சேர்க்க டிரோன் வாயிலாக தேடும் பணி
/
குட்டியை தாய் யானையுடன் சேர்க்க டிரோன் வாயிலாக தேடும் பணி
குட்டியை தாய் யானையுடன் சேர்க்க டிரோன் வாயிலாக தேடும் பணி
குட்டியை தாய் யானையுடன் சேர்க்க டிரோன் வாயிலாக தேடும் பணி
ADDED : மே 28, 2025 11:44 PM

மேட்டுப்பாளையம்; குட்டி யானையை, தாய் யானையுடன் சேர்க்க, வனப்பகுதியில் டிரோன் வாயிலாக யானைக் கூட்டத்தை தேடும் பணிகள் நடைபெறுகின்றன.
சிறுமுகை வனப்பகுதியில், தாய் யானையை பிரிந்த, பத்து மாத குட்டி யானை அங்குமிங்கும் சுற்றியது. இந்த குட்டி யானையை சிறுமுகை வனத்துறையினர், வனத்துறை முகாமுக்கு அழைத்து வந்து, பழங்கள், தர்பூசணி, இளநீர் மற்றும் சத்தான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். வனத்துறை கால்நடை டாக்டர் சுகுமார், குளுக்கோஸ் உட்பட்ட மருந்துவ சிகிச்சை அளித்து, கண்காணித்து வருகிறார்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறியதாவது: தற்போது குட்டி யானைக்கு மருத்துவ சிகிச்சையும், சத்தான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மெலிந்த நிலையில் இருந்த குட்டி யானை, தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இருந்த போதும், குட்டி யானையை, யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதற்காக வனப் பணியாளர்கள் வனப்பகுதிகளில் யானைகள் கூட்டமாக உள்ளனவா என, கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, வனவிலங்கு ஆர்வலர் சுரேஷ் உதவியுடன் டிரோன் கேமரா வாயிலாக, வனப்பகுதி முழுவதும் யானைக் கூட்டத்தை தேடும் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு வனச்சரக அலுவலர் கூறினார்.