ADDED : செப் 19, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
கோவை: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், வரும் 21ம் தேதி கோவைக்கு வர உள்ளார்.
இதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக காளப்பட்டி, கோவில்பாளையம், அன்னூர், தென்திருப்பதி, மேட்டுப்பாளையம், குஞ்சப்பனை, கஞ்சப்பள்ளி, கரியம்பாளையம், கணியூர் சுங்கச்சாவடி, நீலாம்பூர் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளும், காளப்பட்டி, ஒண்டிப்புதூர், ஹோப்காலேஜ், சேரன்மாநகர், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, சின்னியம்பாளையம், நவஇந்தியா, இருகூர் உள்ளிட்ட மாநகர பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் இன்று மாலை 5:00 முதல் 22ம் தேதி காலை 11:00 மணி வரை ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
