/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஆக 02, 2025 11:48 PM
தொண்டாமுத்துார்: தமிழ்நாடு மது மற்றும் கலால்துறை மற்றும் தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரி இணைந்து, 'போதையில்லா தமிழ்நாடு' கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடந்தது.
போதையின் தீமை குறித்து பொது சுகாதாரத்துறை தலைவர் முரளி கிருஷ்ணன் எடுத்துரைத்தார். போதைப் பொருட்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மோகன் தாஸ் விளக்கி கூறினார்.
தொடர்ந்து, போதை விழிப்புணர்வு குறித்து, மாணவர்களுக்கு, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
இக்கருத்தரங்கில், போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என, பேராசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.