ADDED : ஜூன் 25, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
திருமலையாம்பாளையம்: திருமலையாம்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜி. கல்லூரியில் உலக போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போலீஸ் டி.ஐ.ஜி. சாமிநாதன் பேசுகையில்,'' இன்றைய இளைஞர்கள், மாணவர்கள் சமூகத்தின் மிகப்பெரிய சொத்து. அவர்களது ஆற்றலும், திறமையும் நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமாக அமைகிறது. போதை பொருள் பழக்கம் ஒருவரின் வாழ்க்கையை மட்டுமின்றி, அவரது குடும்பம், சமூகத்தையும் பாதிக்கும்'' என்றார்.
மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். ஊர்வலம் சென்றனர். எஸ்.பி. பவன்குமார், டி.எஸ்.பி. சுரேஷ் பங்கேற்றனர்.
