/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : அக் 16, 2025 11:05 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.
கலால் பிரிவு துணை ஆணையர் முருகேசன், கோட்ட கலால் அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகிதத்னர்.ராமு கல்லுாரி முதல்வர் பிரேமலதா, கல்லுாரி சி.இ.ஓ. ஸ்ரீஹரிமுரளி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
பேரணியில், ராமு கல்லுாரி மாணவர்கள், போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றும், கோஷங்களை எழுப்பியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.