தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புறநகர் பகுதிகளை குறி வைக்கும் போதை கும்பல்

 புறநகர் பகுதிகளை குறி வைக்கும் போதை கும்பல்

 புறநகர் பகுதிகளை குறி வைக்கும் போதை கும்பல்


ADDED : பிப் 07, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில்நிறுவனங்கள், தோட்டங்கள், விளைநிலங்கள் உள்ளிட்டவற்றில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

போதை கும்பல்கள் இது போன்ற வெளிமாநில தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலாளிகள், இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருள்களை விற்பனை செய்ய முயன்று வருகிறது.

இதை தடுக்க மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். ஞாயிறு அன்று காரமடை மேம்பாலம் அருகே கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்; 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

காரமடை ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற கேரளா இளைஞரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சிறுமுகை போலீசார் ரோந்து செல்லும் போது, ஆணைப்பள்ளி பகுதியில் 3 இளைஞர்கள் திடீரென ஓடினர். அவர்களை விரட்டி பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் மேட்டுப்பாளையம் ஷேக் தாவூத், 24, அஜய், 25, சான்ஸா, 22, என தெரிந்தது. கால் கிலோ கஞ்சா மற்றும் 160 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us