/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைக்காக மருந்துகள் விற்பனை; கண்டறிந்து தடுக்கும் பறக்கும் படை
/
போதைக்காக மருந்துகள் விற்பனை; கண்டறிந்து தடுக்கும் பறக்கும் படை
போதைக்காக மருந்துகள் விற்பனை; கண்டறிந்து தடுக்கும் பறக்கும் படை
போதைக்காக மருந்துகள் விற்பனை; கண்டறிந்து தடுக்கும் பறக்கும் படை
ADDED : ஜூலை 28, 2025 11:04 PM
பொள்ளாச்சி; தமிழக சட்டசபையில் நடந்த சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில், வலிநிவாரண மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவது, விதிமீறிய கருத்தடை மாத்திரை விற்பனையைக் கண்டறிந்து தடுக்க, மருந்து ஆய்வாளர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, சென்னை மற்றும் மதுரையில் பறக்கும் படை உள்ள நிலையில், தற்போது, மாவட்டந்தோறும், இரு மருந்தக ஆய்வாளர்களை உள்ளடக்கி புதிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்சமயம், ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த பறக்கும் படையினர், வேறு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். வலி நிவாரணி, ஆன்டிபயாடிக், ஆன்டி எபிலெப்டிக், அபார்ஷன் கிட் மருந்துகளின் கொள்முதல், இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை சேகரிக்கின்றனர். விதிமீறல் கண்டறியப்பட்டால், மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கின்றனர்.
இது குறித்து மருந்துக்கட்டுப்பாட்டு கோவை மண்ட உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:
சிறப்பு பறக்கும் படையினர், மாதந்தோறும், இரு முறை ஆய்வு நடத்துவர். பறக்கும் படை ஆய்வின்போது, அந்தந்த பகுதி மருந்தக ஆய்வாளர்கள் உடன் இருப்பர். முதல்கட்ட ஆய்வில், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில், நான்கு மருந்து கடைகள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.