/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழிக்கறிக்கு இணையாக முருங்கைக்காய் விலை
/
கோழிக்கறிக்கு இணையாக முருங்கைக்காய் விலை
ADDED : டிச 09, 2025 05:23 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை, 240 ரூபாயை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக காய்கறி விலை ஏறுமுகமாகி வருகிறது. முருங்கைக்காயின் விலை கேட்டால் மயக்கமே வரும் நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் முருங்கைக்காய் விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை இருந்தது, இப்போது, 240 ரூபாய் வரை எட்டியுள்ளது.
மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் ரூ.230 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகம் என்பதால், முருங்கைக்காய் வாங்க மக்கள் தயங்குகின்றனர்.
முருங்கைக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால், மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் ஒரு கிலோ முருங்கைக்காய், ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு சமமாக விலை உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

