/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ்க்கை முறை மாற்றத்தால்... மலைவாழ் மக்கள் உஷார்!அவர்களுக்கும் சர்க்கரை, பிரஷர்!
/
வாழ்க்கை முறை மாற்றத்தால்... மலைவாழ் மக்கள் உஷார்!அவர்களுக்கும் சர்க்கரை, பிரஷர்!
வாழ்க்கை முறை மாற்றத்தால்... மலைவாழ் மக்கள் உஷார்!அவர்களுக்கும் சர்க்கரை, பிரஷர்!
வாழ்க்கை முறை மாற்றத்தால்... மலைவாழ் மக்கள் உஷார்!அவர்களுக்கும் சர்க்கரை, பிரஷர்!
ADDED : மார் 31, 2024 11:51 PM
கோவை:வாழ்க்கை முறை மாற்றத்தால், மழை வாழ் மக்கள் மத்தியிலும், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளின் விளைவு குறித்து, இம்மக்கள் மத்தியில் சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக குரும்பர், மலசர், காடர், பளியர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களது பாரம்பரியத்தை இன்னும் மாற்றாமல், இருப்பவர்கள் பழங்குடியின மக்கள் மட்டுமே.
கட்டுப்பாடுகள் மாறாவிட்டாலும், இன்று உணவு பழக்கவழக்கங்களில் இவர்களிடமும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த இவர்களுக்கு, சுற்றுச்சூழல் பாதிப்பு இன்று பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இயற்கை உணவுகளான தானியங்கள், மூலிகைகள், கிழங்குகள், காய்கறியை அதிகம் உட்கொண்டு வந்த இவர்கள், இன்று நாகரிக வளர்ச்சியால், அவர்களின் வாழ்வியல் சூழலுக்கு முற்றிலும் தொடர்பில்லாத அரிசி, கோதுமை, உள்ளிட்ட உணவு வகைகளையும் உட்கொள்ள துவங்கியுள்ளனர். இதன் விளைவை தற்போது சந்தித்து வருகின்றனர்.
மருத்துவ முகாமில் பகீர்!
சமீபத்தில், மலை கிராமங்களில் சுகாதார துறை சார்பில், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், 21 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதில், 2,200 பேருக்கு உயர் ரத்த அழுத்தம்(ஹைப்பர் டென்ஷன்) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 886 பேருக்கு சர்க்கரை பாதிப்பும் இருப்பது தெரிந்துள்ளது. 677 பேருக்கு இரண்டு பாதிப்பும் உள்ளது தெரியவந்துள்ளது.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'உடல் உழைப்பு பணிகளான, வேட்டை, விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றில் இருந்து முற்றிலும் விலகி உள்ளனர்.இதன் விளைவால், உடல் உழைப்பு குறைந்து, பல தலைமுறைகளாக கேட்டிராத பல்வேறு நோய்கள், இவர்களை ஆட்கொள்ளத் துவங்கியுள்ளன.
குறிப்பாக சர்க்கரை பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் இவர்களில் பலருக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இது, நம் வாழ்வியல், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் சவால்' என்றார்.
மாறும் உணவு பழக்கங்களே காரணம்
முன்பு தலசீமியா, சிக்கில்சீமியா உள்ளிட்ட பாதிப்புகளே, பழங்குடியினரிடம் இருந்தது.தற்போது மாறி வரும் உணவுப்பழக்க வழக்கங்களால், சர்க்கரை, பிரஷர் பாதிப்புகள் வந்திருக்கலாம். மருத்துவ முகாம்கள் வாயிலாக, பாதிப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து, விரிவாக ஆய்வு செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்தும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- அருணா மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்.

