/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழை எதிரொலியாக வாழைத்தார் வரத்து சரிவு
/
கனமழை எதிரொலியாக வாழைத்தார் வரத்து சரிவு
ADDED : அக் 17, 2024 10:23 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்தை விட வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. மற்றும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, மார்க்கெட்டில், செவ்வாழை கிலோ - 60, நேந்திரன் 25 - 27; கதளி 25 - 35; பூவன் - 35, ரஸ்தாளி - 40, சாம்பிராணி வகை - 40 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை விட, தற்போது செவ்வாழை கிலோ - 10, சாம்பிராணி வகை - 2 ரூபாய் விலை சரிந்துள்ளது. மற்ற வாழைத்தார் விலையில் மாற்ற இல்லை.
வியாபாரிகள் கூறுகையில், 'சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைக்கு, வாழைத்தார் வரத்து அதிகரித்தது, விலையும் உயர்ந்து காணப்பட்டது. தற்போது மழை பொழிவு காரணத்தால், வரத்து குறைந்துள்ளது,' என்றனர்.