/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவை சாலையில் குவிப்பது... வழக்கமா போச்சு! முடிவு கட்டணும் மாநகராட்சி
/
கழிவை சாலையில் குவிப்பது... வழக்கமா போச்சு! முடிவு கட்டணும் மாநகராட்சி
கழிவை சாலையில் குவிப்பது... வழக்கமா போச்சு! முடிவு கட்டணும் மாநகராட்சி
கழிவை சாலையில் குவிப்பது... வழக்கமா போச்சு! முடிவு கட்டணும் மாநகராட்சி
ADDED : பிப் 09, 2026 04:25 AM

கோவை: நகரில் சாக்கடை கால்வாய் துார்வாருதல், ரோட்டுக்கு குறுக்கே மூடுபலகையுடன் கால்வாய் கட்டுதல், தேவையான இடங்களில் வடிகால் கட்டுவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் சாக்கடை கால்வாய் துார்வாரும்போது, கழிவு மண்ணை அள்ளி, அதேயிடத்தில் குவித்து வைத்து விடுகின்றனர்.
கழிவு மண் காயும் வரை துாய்மை பணியாளர்கள் அகற்றுவதில்லை. ஏனென்று விசாரித்தால், கழிவு நீரோடு மண்ணை அள்ளி போட்டால், வாகனம் வீணாகி விடும் என்கின்றனர். காயும் வரை அதேயிடத்தில் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியை கடந்து செல்ல முடிவதில்லை.
அதேபோல், புதிதாக வடிகால் கட்டும்போது ஓரிடத்தில் அடைக்கின்றனர். கழிவு நீர் செல்வதற்கு மாற்று வழித்தடம் செய்வதில்லை. அடைக்கப்படும் இடத்தில் கழிவு நீர் பொங்கி, ரோட்டில் வழிந்தோடுகிறது. புதிதாக கட்டி முடிக்க ஒன்றிரண்டு மாதங்களாகிறது; அதுவரை துர்நாற்றத்தை சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.
வர்த்தக நிறுவனத்தினர் படும் கஷ்டம் சொல்லி மாளாது. துர்நாற்றத்தை சுவாசித்துக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். அருகாமையில் உள்ள பேக்கரி, மெஸ்களில் உணவு பொருட்கள் வாங்க வருவோர் சங்கடப்படுகின்றனர்.
சாக்கடை கால்வாய் கட்டும்போதோ, துார்வாரும்போதோ அள்ளப்படும் கழிவு மண்ணை உடனுக்குடன் அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, ராம்நகர் சாஸ்திரி வீதியில் தனியார் பள்ளிக்கு எதிரே மூடுபலகையுடன் சாக்கடை கால்வாய் ரோட்டுக்கு குறுக்கே கட்டப்படுகிறது.
கான்கிரீட் தளம் போடப்பட்டு விட்டது. ரோட்டின் இருபுறமும் கழிவு குவியல் கிடக்கிறது; நாற்றம் தாங்க முடிவதில்லை. கழிவை சுகாதாரப் பிரிவினர் விரைந்து அகற்ற வேண்டும்.

