/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.65.99 லட்சம் இ - சிகரெட் மொபைல் போன்கள் பறிமுதல்
/
ரூ.65.99 லட்சம் இ - சிகரெட் மொபைல் போன்கள் பறிமுதல்
ரூ.65.99 லட்சம் இ - சிகரெட் மொபைல் போன்கள் பறிமுதல்
ரூ.65.99 லட்சம் இ - சிகரெட் மொபைல் போன்கள் பறிமுதல்
ADDED : பிப் 18, 2026 07:30 AM

கோவை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 65.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகரெட்டுகள், இ - சிகரெட்டுகள், மொபைல் போன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு, 11,12ம் தேதிகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் ஷார்ஜா நகரில் இருந்து வந்த பயணியரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், 11 பயணியர் உடைமைகளில் மறைத்து, சிகரெட்டுகள், இ - சிகரெட்டுகள், மொபைல் போன்கள் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
பயணியரிடம் இருந்து, 3.48 லட்சம் சிகரெட்டுகள், 895 இ - சிகரெட்டுகள், நான்கு மொபைல் போன்கள் என, 65.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.