/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ-காமர்ஸ் சந்தை; ஏற்றுமதி வர்த்தகத்தின் இன்னொரு கதவு
/
இ-காமர்ஸ் சந்தை; ஏற்றுமதி வர்த்தகத்தின் இன்னொரு கதவு
இ-காமர்ஸ் சந்தை; ஏற்றுமதி வர்த்தகத்தின் இன்னொரு கதவு
இ-காமர்ஸ் சந்தை; ஏற்றுமதி வர்த்தகத்தின் இன்னொரு கதவு
ADDED : செப் 30, 2025 10:42 PM

ஆ ன்லைன் வாயிலாக பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் இ- காமர்ஸ் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உள்ளது.
உலகின் அனைத்து நாடுகளும் இ -காமர்ஸ் ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டு இ- காமர்ஸ் சந்தை வரும் 2026ல் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2030ல், 325 பில்லியன் டாலர்களாகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
2026ல் இத்துறையில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தின் பங்கு 49 சதவீதமாக இருக்கும். ஆன்லைன் நிதிச் சேவைகள் 12 சதவீதம், திருமணத் தரகு மற்றும் சிறு விளம்பரங்கள் 3 சதவீதம், இதர ஆன்லைன் சேவைகள் 22 சதவீதம், பயணச் சேவைகள் 14 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை வர்த்தகம் ரம்ஜான், ராக்கி, தீபாவளி, தசரா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விழாக்காலங்களில் இ- காமர்ஸ் வர்த்தகம் அதிக அளவில் நடைபெறுகிறது. இக்காலங்களில் வர்த்தக நிறுவனங்கள் சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்கின்றன.
ஏற்றுமதி உள்நாட்டு சந்தைகள் மட்டுமின்றி, ஏற்றுமதி வாயிலாக வெளிநாட்டு சந்தைகளையும் இந்திய நிறுவனங்கள் குறிவைத்து வருகின்றன. ஏற்றுமதியை ஊக்குவிக்க இந்திய அரசும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
வரும் 2030ல் இந்திய ஏற்றுமதி 1 டிரில்லியனாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில், இ- காமர்ஸ் ஏற்றுமதி 200 பில்லியன் முதல் 300 பில்லியன் டாலர்கள் வரை இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய இ -காமர்ஸ் ஏற்றுமதி மதிப்பு 5 பில்லியன் டாலர்களாக உள்ளது.
வாய்ப்புகள் கடந்த 2024ல் உலக அளவில் ஆன்லைன் வாயிலாக கொள்முதல் செய்வோர் எண்ணிக்கை 271 கோடியாக இருந்தது. இது, 2020ல் 237 கோடியாக இருந்தது. 14.3 சதவீத வளர்ச்சி என்ற அளவில், நடப்பாண்டு இந்த எண்ணிக்கை 300 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இ -காமர்ஸ் ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெற இயலும்.
தேவைகள் சீனா இ -காமர்ஸ் துறையில் வலுவான போட்டியாளராக உள்ளது.
இ- காமர்ஸ் ஏற்றுமதிக்காக இந்தியாவில் தனித்த சட்டங்கள், விதிமுறைகள் இதுவரை இல்லை.
வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023, 2017 ஜி.எஸ்.டி., சட்டம், வெளிநாட்டு பரிவர்த்தனை மற்றும் மேலாண்மைச் சட்டம் 1999, கூரியர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகள் 2010, அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகள், 1962 சுங்க வரி சட்டம் ஆகியவை, இந்திய இ -காமர்ஸ் ஏற்றுமதி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துகின்றன.
இ -காமர்ஸ் ஏற்றுமதிக்கு என, தனியே ஒரு சட்டம் உருவாக்கப்படுவது அவசியம்.
கூரியர் வாயிலான ஏற்றுமதி வரம்பை, சீனாவைப் போல 50 ஆயிரம் டாலர்களாக உயர்த்த வேண்டும். எல்லை தாண்டிய இ -காமர்ஸ் வர்த்தகத்துக்கு பிரத்யேக சுங்கக் குறியீட்டு முறைகள் உருவாக்கி, நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
சுங்க ஒப்புதல் நடைமுறைகளுக்கான கால விரயத்தைத் தவிர்த்து, துரிதமாக வழங்க வேண்டும்.
மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இ காமர்ஸ் ஏற்றுமதிக்கு நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இத்துறையின் வளர்ச்சி கருதி, தமிழக அரசு அதிக சந்தை வாய்ப்புகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.