/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர் மட்ட பாலம் அமைக்க பூமி பூஜை
/
உயர் மட்ட பாலம் அமைக்க பூமி பூஜை
ADDED : டிச 10, 2025 09:07 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூரில் உயர் மட்ட பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனூரில் இருந்து, பாலார்பதி செல்லும் ரோட்டில் வரட்டாறு அருகே தரை மட்ட பாலம் உள்ளது. மழை காலங்களில் இந்த ரோட்டில் பயணிக்க மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது இங்கு நெடுஞ்சாலை துறை சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 75 மீட்டர் நீளத்தில், புதிதாக உயர் மட்ட பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
இந்நிகழ்ச்சியில், சொக்கனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

