/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருத்திய வாக்காளர் பட்டியல் படிவத்தை ஆன்லைனில் எளிதாக 'செக்' பண்ண வசதி
/
திருத்திய வாக்காளர் பட்டியல் படிவத்தை ஆன்லைனில் எளிதாக 'செக்' பண்ண வசதி
திருத்திய வாக்காளர் பட்டியல் படிவத்தை ஆன்லைனில் எளிதாக 'செக்' பண்ண வசதி
திருத்திய வாக்காளர் பட்டியல் படிவத்தை ஆன்லைனில் எளிதாக 'செக்' பண்ண வசதி
ADDED : நவ 27, 2025 02:39 AM
கோவை: மாநிலம் முழுதும் வாக்காளர் பட்டியல் திறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ. ஆர்.,) பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. படிவம் உரிய முறையில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதா என்பதை, ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
சிறப்பு முகாம்களும் நடக்கின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.,) உங்களுக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கியிருப்பார். அதைப் பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.,விடம் சமர்ப்பித்தால் போதும். அந்தப் படிவம் உரிய முறையில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதா என்பதை, ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
'இ.சி.ஐ.நெட்' என்ற செயலி வாயிலாகவோ அல்லது, voters.eci.gov.in/signup என்ற இணைய முகவரியிலோ, சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதோ இப்படித்தான் இணைய முகவரிக்குள் சென்றதும், உங்களது மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓ.டி.பி., பெறவும். மின்னஞ்சல் முகவரி கேட்கப்படும்; கட்டாயமில்லை.
ஓ.டி.பி.,யை உள்ளிட்டு உள்ளே நுழைந்ததும், 'சர்வீசஸ்' என்ற பகுதியின் கீழ், எஸ்.ஐ.ஆர்., 2026 என்ற பகுதியில், 'பில் எனுமரேஷன்' என்ற பகுதியைத் தேர்வு செய்யவும்.
அதை கிளிக் செய்ததும், 'ஆன்லைன் பார்ம் சப்மிஷன் பை எலெக்டர்' என்ற பகுதி திறக்கும். இதில், மாநிலத்தைத் தேர்வு செய்து, மற்றொரு பகுதியில் உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிடவும்.
உங்களது படிவம் 'சப்மிட்' செய்யப்பட்டிருந்தால், 'ஏற்கனவே உங்களது படிவம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது' என்ற உறுதிச் செய்தி வரும்.
அப்படி வராவிடில், உங்களது பி.எல்.ஓ.,வைத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு வழங்கப்பட்ட படிவத்திலேயே, பி.எல்.ஓ.,வின் தொடர்பு எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். அல்லது இ.சி.ஐ., நெட் செயலி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

