/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.கம்யூ. அரசியல் பயிற்சி மையம் திறப்பு
/
இ.கம்யூ. அரசியல் பயிற்சி மையம் திறப்பு
ADDED : பிப் 11, 2026 05:14 AM

கோவை: கோவை மில் தொழிலாளர் சங்கம் சார்பில், இ.கம்யூ. மூத்த தலைவர் என்.கே.கிருஷ்ணன் பெயரில், தொட்டிபாளையம், அக்ரஹார சாமக்குளம் பண்ணை தோட்டத்தில் தொழிலாளர் கல்வி அரசியல் பயிற்சி மையம் திறக்கப்பட்டது.மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
தேசிய குழு உறுப்பினர் முத்தரசன் மையத்தை திறந்து வைத்தார். ''என்.கே.கிருஷ்ணன் பல காலம் கட்சி பணியாற்றியவர். ஓய்வு பிறகு 'நம்பிக்கை ஒளி' என்ற புத்தகத்தை எழுதி இளைஞர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தினார். இந்த கல்வி மையத்தை இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.'' என்றார். ஏ.ஐ.டி.யூ.சி. தேசிய செயலாளர் மூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இ.கம்யூ. மாவட்ட செயலாளர் சிவசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. செயலாளர் தங்கவேல் வாழ்த்துரை வழங்கினர்.

