தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பணி நிரந்தரம் கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜூன் 29, 2026 11:19 PM

ADDED : ஜூன் 29, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 11:19 PM ADDED : ஜூன் 29, 2026 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மீதான வரிகளை குறைக்க, தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இ.கம்யூ., கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை கண்டித்த அவர்கள், தமிழகத்தில் அவற்றை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர்.

அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் மட்டுமே, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்; இல்லையெனில் அத்திட்டம் முடக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us