தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கற்கை நன்றே கல்வி உதவி தொகை வழங்கும் விழா

கற்கை நன்றே கல்வி உதவி தொகை வழங்கும் விழா

கற்கை நன்றே கல்வி உதவி தொகை வழங்கும் விழா


ADDED : ஆக 16, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் நடந்த கற்கை நன்றே நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களை ஊக்கப்படுத்தி, உதவி வருகிறது குரும்பபாளையம் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை. ஒவ்வொரு ஆண்டும் இரு முறை கற்கை நன்றே நிகழ்ச்சியை நடத்தி, மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் அளிக்கிறது.

நேற்று நடந்த இந்தாண்டுக்கான கற்கை நன்றே கல்வி விழாவில், 40 மாணவர்களுக்கு இன்ஜினியரிங், மருத்துவம், கலை படிப்புகளில் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

உதவித்தொகை பெற்று வேலையில் சேர்ந்த 10 பேர், அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

சைதன்யா அறக்கட்டளை நிறுவனர் செந்தில் பிரபு பேசுகையில், “ கல்வி பணிகளுடன் ‘வாசிப்போம் வாங்க’ என்ற போட்டியும், மன ஒருமைப்பாட்டுக்கான பிரத்யேக தியான பயற்சியையும் அறக்கட்டளை நடத்தி வருகிறது,” என்றார்.

நிகழ்ச்சியில், ஆரணி தொழிலதிபர் திருநாவுக்கரசு, கோவை ஏர்டெல் தலைமை நிர்வாகி சண்முகசுந்தரம், ஸ்ரீதர் பாபு ஆகியோர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us