/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கற்ற கல்வி சமூகத்துக்கும் உபயோகப்பட வேண்டும்'
/
'கற்ற கல்வி சமூகத்துக்கும் உபயோகப்பட வேண்டும்'
ADDED : மார் 06, 2024 01:29 AM

கோவை:நீலாம்பூர், கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பட்டமளிப்புவிழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழ்நாடு கல்வியியல் கல்லுாரியின் துணைவேந்தர் பஞ்சநாதம் பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
அவர் பேசுகையில், ''மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், பன்முகத்தன்மை கொண்டவர்களாக, திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். கற்ற கல்வி தங்களுக்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டும். படிப்பிற்கு ஏற்ற வேலை என்றில்லாமல், தொழில்முனைவோர் ஆக மாறவும், மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.
நிகழ்வில், 232 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கதிர் கல்வி நிறுவனத்தின் தலைவர் கதிர், செயலர் லாவண்யா, முதல்வர் கற்பகம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

