UPDATED : நவ 11, 2026 04:03 PM
ADDED : நவ 11, 2026 04:00 PM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜோதிநகர் படிகள் படிப்பகத்தில், 31வது நிகழ்வு நடந்தது. படிகள் படிப்பக நிறுவனர் ஜெயக்குமார் வரவேற்றார். வேட்டைக்காரன்புதுார் ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் வீரவேல் முன்னிலை வகித்தார்.
கார்க்கியின், ‘பென் ஒன்று கண்டேன்’ என்ற குறும்படம் திரையிடப்பட்டது. படம் குறித்து பேசிய ஆசிரியர் மனுவேல், வாழ்க்கை என்பது பிறருக்காக வாழ்வதுதான் என்பதை இந்த படம் உணர்த்துகிறது என்றார். நிர்வாகி பூங்கொடி நன்றி கூறினார். நிகழ்வின் இறுதியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
