
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டு வேலை செய்து தான் ஓட்டுகிறேன். ஏற்கனவே காய்கறி விலை அதிகமாகி கொண்டிருக்கிறது. கறி வாங்க காசில்லாத போது, முட்டை வாங்குவது தான் வழக்கம். முட்டை விலையும் ஏறினால் என்ன செய்வது. வீட்டில் ஐந்து பேர் இருந்தால், முட்டைக்கே 40 ரூபாய் ஆகிவிடும். ஒவ்வொன்றாக கைக்கு எட்டாமல் போகிறது. - ஏ. கிருஷ்ணவேணி, 60, ராமநாதபுரம். மளிகை கடை நடத்தி வருகிறேன். காய்கறி விலையை ஒப்பிடுகையில், முட்டை விலை உயர்வு அதிகமில்லை. வழக்கமாக இந்த சீசனில், முட்டை விலை கூடத்தான் செய்யும். பனி விலகியதும் குரைந்து விடும். மக்களுக்கும் தெரியும். அதனால், யாரும் வாங்காமல் நிறுத்த
மாட்டார்கள். எளிதாக சமைக்க முடியும் என்பதால், முட்டை பிசினஸ் குறையாது. - கே.மோகன்ராஜ், ஒலம்பஸ். குறைந்த விலையில் கிடைக்கும் புரதசத்து முட்டை மட்டும்தான். குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்கிறோம். கடந்த மாதம்தான் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாய் ஆனது. இப்போது 8 க்கு போயிருக்கிறது. இதை சாக்கிட்டு 15 ரூபாய் முட்டை போண்டாவை 20 ரூபாய் ஆக்கிவிட்டார்கள். இதுதான் பிரச்னை. சசிக்குமார், ராம்நகர் * மார்கழி மாதம் வந்தால் முட்டை, மீன், இறைச்சி விலை குறையும். இப்போது முட்டை விலை உயந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நான்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, ஒரே வருஷத்தில் எட்டு ரூபாயாகி உள்ளது. இது ரொம்ப அதிகம், விலையை குறைக்க வேண்டும். செண்பகதாரணி, கண்ணப்பன்நகர் ஒரு முட்டையை ரூ.6.99க்கு கொள்முதல் செய்வதாக கூறினாலும், அது சந்தைக்கு வரும்போது ரூ.2 வரை கூடுதலாக விலை உயர்கிறது. ஓட்டல்களில் இப்போது ரூ.20க்கு விற்கப்படும் ஆம்லெட், அடுத்த வாரம் ரூ.30 ஆக உயரலாம். எல்லா விலையும் ஏறுகிறது. நமக்கு வருமானம் மட்டும் அதற்கேற்ப உயரவில்லை. விலை உயர்வு அடித்தட்டு மக்களைதான் பாதிக்கிறது. கஜேஷ், சலூன் வீதி, காந்தி பார்க் மாதந்தோறும் வீட்டுக்கு வாங்கும் மளிகை பொருட்களின் விலை உயர்கிறது. அதில், முட்டையும் சேர்ந்து விட்டது. முன்பு 4 முட்டை வாங்கிய இடத்தில், இப்போது ஒரு முட்டையை குறைத்து வாங்க வேண்டிய நிலை. சமாளிக்க வேண்டியது தான். நம்மால் வேறென்ன செய்ய முடியும்? மாரியம்மாள், சுக்கு வார்பேட்டை

