UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 10:46 PM
கோவை: சபரிமலை செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர் – கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து வரும் 19 முதல் அடுத்தாண்டு ஜன., 21ம் தேதி வரை வியாழன்தோறும் இரவு 11:40க்கு புறப்படும் ரயில் (06117) மறுநாள் மாலை 4:30க்கு கொல்லம் அடைகிறது.
கொல்லத்தில் இருந்து வரும் 20 முதல் ஜன., 22 வரை வெள்ளிதோறும் மாலை 6:45க்கு புறப்படும் ரயில் (06118) மறுநாள் மதியம் 12:30க்கு சென்னை அடைகிறது. பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், திருப்பூர், போத்தனுார், பாலக்காடு உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
அதேபோல், பீஹார் மாநிலம் தர்பங்கா ஸ்டேஷனில் இருந்து போத்தனுாருக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தர்பங்காவில் இருந்து வரும் 18ம் தேதி காலை 7:05க்கு புறப்படும் ரயில் (05591) 20ம் தேதி மதியம் 3:30க்கு போத்தனுார் அடைகிறது. பருணி, தன்பாத், ராஞ்சி, விஜயவாடா, காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
