sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோவில்களில் மூத்த தம்பதியினர் சிறப்பிப்பு

/

 கோவில்களில் மூத்த தம்பதியினர் சிறப்பிப்பு

 கோவில்களில் மூத்த தம்பதியினர் சிறப்பிப்பு

 கோவில்களில் மூத்த தம்பதியினர் சிறப்பிப்பு


ADDED : பிப் 11, 2026 09:55 AM

Google News

ADDED : பிப் 11, 2026 09:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, உடுமலையில் கோவில்களில், மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடந்தது.

ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்ய வேண்டும் என, சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில், 10 தம்பதியர் சிறப்பிக்கப்பட்டனர். மாலை அணிவித்து, புடவை, வேட்டி, சட்டை, வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகள், எவர்சில்வர் தட்டம், கண்ணாடி வளையல் ஒரு டஜன், பாக்கெட் சைஸ் சுவாமி படம் என, 2,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வீதம், 10 பேருக்கு வழங்கப்பட்டது.

நகராட்சி தலைவர் சியாமளா, மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தார். துணை தலைவர் கவுதமன், செயல் அலுவலர்கள் பாலசுப்ரமணியம், ராமகிருஷ்ணன், கிணத்துக்கடவு ஆய்வர் கீதா, நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

உடுமலை ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், 60 வயதிற்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. தேர்வு செய்யப்படும் தம்பதிகளுக்கு சிறப்பு யாகம் நடத்தி, புத்தாடை, கனிகள், பிரசாதம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், உடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா நேற்று நடந்தது. இதில், 80 மூத்த தம்பதியினர் பங்கேற்றனர்.

அவர்களுக்காக, யாக பூஜை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பிரசாதம் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

அதே போல், உடுமலை மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில், 15 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

- நிருபர் குழு -:






      Dinamalar
      Follow us