UPDATED : அக் 21, 2026 05:58 PM
ADDED : அக் 21, 2026 05:54 PM
கோவை: கோவையை சேர்ந்த 65 வயதான முதியவரை மொபைலில் தொடர்பு கொண்ட மர்மநபர், மத்திய புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி பேசுவதாக கூறினார். அவரது ஆதார் கார்டு பல மோசடிகளுக்கு தீவிரவாத அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மொபைல் போனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளதாகவும், அவரது வங்கி கணக்கு வாயிலாக சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்துள்ளனர்.
வீடியோ கால் வாயிலாக, மேலும் சிலர் சேர்ந்து நான்கு நாட்கள் அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்தனர். குடும்பத்தினரிடம் பேசக்கூடாது என்றும் எச்சரித்தனர்.
ஒரு கோடி ரூபாய் அனுப்பினால், விட்டு விடுவதாக கூறினர். அவர்களிடம் இருந்த தப்பிக்க நினைத்த முதியவர், மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
