/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானை தாக்கி முதியவர் பரிதாப பலி
/
காட்டு யானை தாக்கி முதியவர் பரிதாப பலி
ADDED : ஏப் 27, 2025 09:18 PM
பாலக்காடு : பாலக்காடு அட்டப்பாடியில், காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி ஸ்வர்ணகத்தா பகுதியைச்சேர்ந்தவர் காளி, 60. இவர், நேற்று மதியம் அப்பகுதியைச்சேர்ந்தவர்களுடன், விறகு சேகரிக்க வனத்தினுள் சென்றுள்ளார். அப்போது அவர் காட்டு யானை முன் சிக்கிக்கொண்டார். தப்பியோட முயன்ற அவரை யானை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை, விறகு சேகரிக்க சென்றவர்கள் முதலில் கோட்டத்தறை அரசு மருத்துவமனையிலும், பிறகு திருச்சூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து புதுார் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.