/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டிலிருந்த நகை, பணம் திருடியதாக மூதாட்டி கைது
/
வீட்டிலிருந்த நகை, பணம் திருடியதாக மூதாட்டி கைது
ADDED : ஆக 06, 2025 10:21 PM
தொண்டாமுத்தூர்; தீத்திபாளையம், அன்பு நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரது மனைவி மகாலட்சுமி, 28. இவரது வீட்டில், சில மாதங்களுக்கு முன்பு, தீத்திபாளையம், பெரியார் நகரைச் சேர்ந்த கன்னியம்மாள், 65 என்பவர் வேலை செய்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பிலிருந்து, கன்னியம்மாள் வேலைக்கு வராமல் நின்று விட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மகாலட்சுமி, மாலையில், பள்ளியிலிருந்து தனது குழந்தையை அழைத்து செல்வதற்காக, வீட்டை பூட்டிவிட்டு, சாவியை வழக்கம்போல செருப்பு வைக்கும் இடத்தில் வைத்துள்ளார். குழந்தையுடன் மீண்டும் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்திருந்தது. பீரோவில் இருந்த 4 கிராம் நகை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் திருட்டு போயிருந்தது.
சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்தபோது, இதற்கு முன் வீட்டில் வேலை செய்து வந்த கன்னியம்மாள் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கன்னியம்மாளை கைது செய்தனர்.