ADDED : செப் 01, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
கோவை: அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கற்றல் தரத்தை உயர்த்த, பெற்றோர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மைக் குழுக்கள், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
2024ல் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து, புதிய குழுவை அமைப்பதற்கான தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்தில், 53வது வார்டு கவுன்சிலர் மோகன் பங்கேற்றார். தலைமை ஆசிரியை சுகுணா, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
