/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு
/
தேர்தல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு
ADDED : ஜன 12, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை, தேர்தல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், வாக்காளர், பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தங்கள் செய்தல், மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறியீடு செய்தல், திருநங்கையர்களுக்கான சிறப்பு முகாம் ஆகிய பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை தேர்தல் சிறப்பு பார்வையாளர் குல்தீப் நாராயணன் மற்றும் மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

