/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சார கார் தீப்பிடித்து எரிந்தது
/
மின்சார கார் தீப்பிடித்து எரிந்தது
ADDED : அக் 30, 2025 11:20 PM
அன்னூர்:  மின்சார கார் தீப்பிடித்து எரிந்தது.
கோவை, விளாங்குறிச்சியை சேர்ந்த மார்க்கண்டேயன் மகன் அருண், 41; தொழிலதிபர். இவர் சில மாதங்களுக்கு முன்பு பேட்டரி கார் புதிதாக வாங்கியுள்ளார்.
நேற்று மதியம் அன்னூரில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி புதிய காரில் சென்று கொண்டிருந்தார். எல்லப்பாளையம் பிரிவு அருகே செல்லும்போது சாலையின் நடுவில் வைக்கப்பட்டு இருந்த டிவைடர் மீது கார் மோதி சாலையின் வடக்கு பகுதியில் கவிழ்ந்தது.
கவிழ்ந்த வேகத்தில் காரின் முன் பகுதியில் தீ பிடித்தது. தகவல் அறிந்து அன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த அருணை காரின் கதவை உடைத்து மீட்டனர். இதற்குள் காரில் தீ பரவியது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஒன்றரை மணி நேரம் போராடினர். எனினும் காரின் பெரும் பகுதி தீயில் எரிந்து நாசமானது.
இதனால் சிறிது நேரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவ இடத்தில் அன்னூர் போலீசார் விசாரணை நடத்தினர். விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் அருண் காயம் இன்றி உயிர் தப்பினார்.

