/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம் இடம் மாற்றம்
/
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம் இடம் மாற்றம்
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம் இடம் மாற்றம்
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம் இடம் மாற்றம்
ADDED : ஜன 21, 2026 05:17 AM

சூலூர்: சூலூர் கலங்கல் ரோடு திருச்சி ரோடு வளைவில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த உயர் அழுத்த மின் கம்பம் இடம் மாற்றப்பட்டது.
சூலூரில், பேரூராட்சி அலுவலகம் அருகே திருச்சி ரோடும், கலங்கல் ரோடும் சந்திக்கின்றன. கலங்கல் ரோட்டின் கிழக்குபுற வளைவில், ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் உயர் அழுத்த மின் கம்பம் இருந்தது. இதனால், திருச்சி ரோட்டில் இருந்து கலங்கல் ரோட்டுக்கு இடது புறமாக கனரக வாகனங்கள், பஸ்கள் திரும்ப முடியாத நிலை இருந்தது. கன்டெய்னர் வாகனங்கள் அந்த இடத்தில் திரும்பும் போது, மின்கம்பத்தில் உரசி நின்ற சம்பவங்களும் நடந்தன. அந்த மின் கம்பத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இடம் மாற்றி அமைக்க, பேரூராட்சி நிர்வாகம், பொது நல அமைப்புகள், வாகன ஓட்டிகள், மின் வாரியத்துக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மின் கம்பத்தை இடம் மாற்றி அமைக்கும் பணியில், மின் வாரிய ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். கலங்கல் ரோட்டில் தென்புறமாக, ரோட்டின் ஓரத்தில் மின் கம்பத்தை நட்டனர்.

