தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தாறுமாறாக தொங்கும் கேபிள்கள் அகற்றுமாறு மின்வாரியம் எச்சரிக்கை

 தாறுமாறாக தொங்கும் கேபிள்கள் அகற்றுமாறு மின்வாரியம் எச்சரிக்கை

 தாறுமாறாக தொங்கும் கேபிள்கள் அகற்றுமாறு மின்வாரியம் எச்சரிக்கை


ADDED : ஜன 28, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மின் கம்பங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கேபிள்கள் மற்றும் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்றாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.

கோவை மின் பகிர்மான வட்டம் மாநகர் செயற்பொறியாளர் சுரேஷ் அறிக்கை:

மாநகர் மையக் கோட்ட பிரிவுக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், உக்கடம், புலியகுளம், ராமநாதபுரம் மற்றும் காந்திபார்க் பகுதிகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மின் கம்பங்களில், தனியார் விளம்பர டிவி சேனல்களின் கேபிள்கள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றின் வாயிலாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின் கம்பங்களில் டிவி சேனல் கேபிள்கள் மற்றும் தனியார் விளம்பர சேனல்களின் கேபிள்களை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us