/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டின் உள்ளே மின்சாரம் பாய்கிறது! தவிக்கிறார்கள் தெலுங்குபாளையம் மக்கள்
/
வீட்டின் உள்ளே மின்சாரம் பாய்கிறது! தவிக்கிறார்கள் தெலுங்குபாளையம் மக்கள்
வீட்டின் உள்ளே மின்சாரம் பாய்கிறது! தவிக்கிறார்கள் தெலுங்குபாளையம் மக்கள்
வீட்டின் உள்ளே மின்சாரம் பாய்கிறது! தவிக்கிறார்கள் தெலுங்குபாளையம் மக்கள்
ADDED : அக் 21, 2024 11:45 PM

மின்கசிவு அபாயம்
பீளமேடு எசோ பங்க் பஸ் ஸ்டாப்அருகில், மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு வருகிறது. மழை காலம் என்பதால், உயிரிழப்பு ஏற்படுத்தும் விபத்து அபாயம் உள்ளது. உடனடியாக மின்வாரியம் கவனிக்க வேண்டியது அவசியம்.
- நாகராஜ், பீளமேடு.
சாலை சீரமைக்கல
பீளமேடு துக்கினார் வீதியில், குழாய் பதிக்க தோண்டிய இடங்களை சீரமைக்காமல் விட்டுள்ளனர். இரண்டு மாதங்கள் ஆகியும் பணிகள் நடைபெறவில்லை. குறுகிய சாலை என்பதால், அப்பகுதியில் நடப்பதே சிரமமாகியுள்ளது. மின்சார, கேபிள் ஒயர்களும் எட்டிபிடிக்கும் தொலைவில் தொங்கி கொண்டு இருக்கிறது.
- ராஜாத்தி, பீளமேடு.
குழந்தைகளுக்கு அவஸ்தை
கோவை ஜி.என்.மில்ஸ் உருமாண்டம்பாளையம், வார்டு எண் 13 சாஸ்திரிநகர் பகுதியில், பாதாள சாக்கடை பணி முடிந்தும் ரோடு சரிவரப்போடாததால், மழைக்காலத்தில் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். வாகனங்கள் சகதியில் பதிந்து விடுகின்றன.
- லதா, ஜி.என்.மில்ஸ்.
சீரமைக்காத ரோடு
இடையர்பாளையம் பைரவர் கோவில் லட்சுமி நகர் 5வது வீதியில், சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. இதுவரை சரிசெய்யாமல் உள்ளதால், சேறும் சகதியுமாக உள்ளது. உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை தேவை.
- பார்வதி, இடையர்பாளையம்.
வீட்டுக்கு நடுவில் மின்கம்பம்
தெலுங்குபாளையம், 76வது வார்டு பகுதியில் வீடுகளுக்கு நடுவில் மின்கம்பம் உள்ளதால், மின் கசிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் வீட்டின் உள்ளே மின்சாரம் பாய்வதை உணர்கிறோம். பல முறை கவுன்சிலர், மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனலட்சுமி, தெலுங்குபாளையம்.
பயன்பாடில்லா மைதானம்
ஒண்டிப்புதுார் புது இட்டேரி வீதி, காரணம் பெருமாள் கோவில் அருகில் பொது மைதானத்தில் கடந்த இரு மாதங்களாக வேரோடு சாய்ந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. மைதானம் பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் இருக்கிறது.
- மனோகரன், ஒண்டிப்புதுார்.
வீட்டுக்குள் போகவே சிரமம்
வெள்ளலுார் வார்டு எண் 1, கே.ஆர்.கார்டன் பகுதியில் மழை காரணமாக சாலை முற்றிலும் சேறும் சகதியுமாக உள்ளது. நடப்பதற்கு கூட வழியில்லை. அவசரத்திற்கு வெளியில் செல்லவோ, வீட்டுக்குள் வரவோ, கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றோம்.
- பாக்கியலட்சுமி, வெள்ளலுார்.
பத்து ரூபாய் பத்திரம்
காந்திபுரம் அன்னபூர்ணா உணவகம் அருகில் உள்ள, மஞ்சள் பை பெறுவதற்கான ஏ.டி.எம்., செயல்படாமல் உள்ளது. 10 ரூபாய் செலுத்திய பின், பை வருவதில்லை. இதை சரிசெய்ய முடியவில்லை என்றாலும், பயன்பாட்டில் இல்லை என்ற அறிவிப்பையாவது வைத்தால், மக்கள் ஏமாற மாட்டார்கள்.
- பாலாஜி, சாய்பாபா காலனி.
விழும் நிலையில் மரம்
வெள்ளக்கிணறு திருவள்ளுவர் வீதியில், ஒரு ஆண்டுக்கு மேலாக மரம் ஒன்று காய்ந்து, ஒவ்வொரு கிளையாக விழுந்து வருகிறது. ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் இம்மரத்தை, உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
- கிருஷ்ணகுமார், வெள்ளக்கிணறு.
குதிரைகள் உலா
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே, சுதந்திரமாக சுற்றித்திரியும் குதிரைகளால், வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமங்கள் எழுந்துள்ளன. விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- சசிதரன், பேரூர்.