sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நாளொன்றுக்கு குப்பையில் இருந்து 20 மெகாவாட் மின்சாரம்! ரூ.450 கோடிக்கு டெண்டர் கோரியது மாநகராட்சி

/

 நாளொன்றுக்கு குப்பையில் இருந்து 20 மெகாவாட் மின்சாரம்! ரூ.450 கோடிக்கு டெண்டர் கோரியது மாநகராட்சி

 நாளொன்றுக்கு குப்பையில் இருந்து 20 மெகாவாட் மின்சாரம்! ரூ.450 கோடிக்கு டெண்டர் கோரியது மாநகராட்சி

 நாளொன்றுக்கு குப்பையில் இருந்து 20 மெகாவாட் மின்சாரம்! ரூ.450 கோடிக்கு டெண்டர் கோரியது மாநகராட்சி

3


UPDATED : மார் 11, 2026 09:06 AM

ADDED : மார் 11, 2026 05:53 AM

Google News

UPDATED : மார் 11, 2026 09:06 AM ADDED : மார் 11, 2026 05:53 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை கோவை, திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து நாளொன்றுக்கு 1,200 டன் குப்பை சேகரித்து, 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவையில் சேகரமாகும் குப்பை வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. குப்பை பிரச்னை அனைத்து உள்ளாட்சிகளிலும் தீராத தலைவலியாக இருப்பதால், நிரந்தர தீர்வு காண, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டது. முதல்கட்டமாக, கோவை, மதுரையில் செயல்படுத்தும் வகையில் டெண்டர் கோரியிருக்கிறது. இதன்படி நாளொன்றுக்கு 1,200 டன் குப்பை கையாளும் திறனில் மின்னுற்பத்தி நிலையம் மற்றும் குப்பை கிடங்கு உருவாக்கப்படும்.

வெள்ளலுாரில் கிடங்கில் இதற்காக 35 ஏக்கர் ஒதுக்கப்பட்டு உள்ளது. இம்மையம் பயன்பாட்டுக்கு வரும்போது, கழிவு உடனுக்குடன் அழிக்கப்படும். மின்னுற்பத்தி மையத்தை சொந்த செலவில் கட்டி, 30 ஆண்டுகள் இயக்க வேண்டும். அதன்பின், அரசு வசம் ஒப்படைக்கும் என்கிற நிபந்தனையோடு தனியார் நிறுவனங்கள் அழைக்கப்பட்டு உள்ளன. திட்ட மதிப்பீடு 450 கோடி ரூபாய். டெண்டர் கோர ஏப். 2 கடைசி நாள்.

கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் பேசியபோது, ''கோவையில் சேகரமாகும் குப்பை மட்டுமின்றி, சுற்றியுள்ள உள்ளாட்சி பகுதிகளில் சேகரிக்கும் குப்பை மற்றும் திருப்பூர் குப்பையையும் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த உள்ளோம். கோவையில் தரம் பிரித்து சேகரிக்கிறோம்; திருப்பூரில் தரம் பிரிக்காத குப்பையாக வருகிறது; தரம் பிரித்து கொடுக்க கோருவோம். முடியாத பட்சத்தில், டில்லியில் இருப்பதை போல், 'மிக்ஸ்டு' குப்பையை மின்சாரமாக மாற்றும் திறனுள்ள 'பிளான்ட்' உருவாக்குவோம். நாளொன்றுக்கு 1,200 டன் கழிவுகளில் இருந்து 20 மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய முடியும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us