UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 11:56 PM
ரேஸ்கோர்ஸ்: மின்னணு கழிவுகளால் சுற்றுச்சூழல், மனித ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாவது குறித்து, வீ தி லீடர்ஸ் அமைப்புவிழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, மின்னணு கழிவு சேகரிப்பு முகாமையும் நேற்று ரேஸ்கோர்ஸில் நடத்தியது.
வீ தி லீடர்ஸ் அமைப்பு தன்னார்வலர் அனுஷா ரவி தலைமை வகித்தார். மக்களிடம் இருந்து கழிவாகும் மொபைல் போன்கள், சார்ஜர்கள், பேட்டரிகள், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை சேகரித்தனர்.
மின்னணுப் பொருட்கள் பயன்பாட்டுக்குப் பிறகு முறையாக சேகரிக்கப்படாமல் திறந்தவெளியில் வீசப்படுவதால், அவற்றில் உள்ள ரசாயனங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் மண் மற்றும் நிலத்தடி நீரில் கலந்து, உணவுச் சங்கிலி மூலம் மனிதர்களை பாதிக்கும் அபாயம் உள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
அக்.14-ல் சர்வதேச மின்னணு கழிவு நாள் அனுசரிப்பதை முன்னிட்டு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் இருந்து மின்னணு கழிவு சேகரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
