தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுருக்கு கம்பியில் சிக்கிய யானை சிகிச்சை பலனின்றி இறப்பு

சுருக்கு கம்பியில் சிக்கிய யானை சிகிச்சை பலனின்றி இறப்பு

சுருக்கு கம்பியில் சிக்கிய யானை சிகிச்சை பலனின்றி இறப்பு

1


ADDED : செப் 15, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 10:24 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

சிறுமுகை: சிறுமுகையில், காலில் சுருக்கு கம்பி மாட்டி சிகிச்சை பெற்ற பெண் யானை இறந்தது.

சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை அருகே உளியூர் வனப்பகுதியில், இடது முன்னங்காலில் சுருக்கு கம்பி சுற்றி, காயமடைந்த 10 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று வனப்பணியாளர்கள் ரோந்தின் போது கண்டறியப்பட்டது. அந்த யானைக்கு கடந்த 6ம் தேதி, வனக்கால்நடை மருத்துவ குழுவினரால் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

பின் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. யானைக்கு நோய் தொற்று இருப்பதின் காரணத்தினால், வன கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சிறுமுகை வனத்துறை சார்பில் குழுக்கள் அமைத்து, யானைக்கு தேவையான மருந்துகள், பழங்களில் கலந்து கொடுத்து தொடர்ந்து உடல்நலம் கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி, யானையை கண்காணிக்கும் பணி மேற்கொண்ட போது, சிகிச்சை அளிக்கப்பட்ட யானை தென்படவில்லை. இதையடுத்து, வனத்துறையினர் யானையை தேடும் பணியை மேற்கொண்டனர்.

இதனிடையே நேற்று யானை, தாமரைப்பாலி என்ற இடத்தில் புதர் மறைவில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, சிறுமுகை வனச்சரகர் தினேஷ் கூறுகையில், இறந்த பெண் யானைக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின் யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும், என்றார்.

--

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us