/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் நடமாட்டம்: விறகு தேட செல்ல தடை
/
யானைகள் நடமாட்டம்: விறகு தேட செல்ல தடை
ADDED : நவ 27, 2025 05:01 AM

வால்பாறை: எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வனப்பகுதிக்குள் யாரும் விறகு தேட செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வால்பாறையில் பருவமழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வன வளம் பசுமையாக உள்ளதாலும், யானைகளுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதாலும், இவை வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் கூட யானைகள் ரோட்டிலும், தேயிலை எஸ்டேட்டிலும் முகா மிடுகின்றன.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்டேட் அருகே, வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, பகல் நேரத்தில் தொழிலாளர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, விறகு தேட செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடக் கூடாது,' என்றனர்.

