/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டத்தில் யானை எலும்புக்கூடு
/
தோட்டத்தில் யானை எலும்புக்கூடு
ADDED : ஜன 20, 2025 06:35 AM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கல்லடிக்கோடு அருகே உள்ள பகுதி மூன்னேக்கர். வன எல்லையில் உள்ள இப்பகுதியில், கரிமலை ஆற்றிலை நீர்வீழ்ச்சியின் அருகே, சுவாமி பாறைக்கு கீழே உள்ள, தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், காட்டு யானையின் எலும்புக்கூடு கிடப்பது குறித்து, தொழிலாளிகள் கண்டனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு மண்ணார்க்காடு பிரிவு வன அலுவலர் அப்துல் லத்தீபின் தலைமையிலான வனத்துறையினர் வந்து மேல் நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து வன அதிகாரி மனோஜ் கூறுகையில், ''ஆண் யானையின் எலும்புக்கூடு நான்கு மாதத்திற்கு மேலாக அங்கு இருந்திருக்கும். விரிவான பரிசோதனைகள் செய்தால் மட்டுமே வயது உட்பட உள்ளவை குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும். தந்தங்கள் அங்கேயே கிடந்துள்ளன'' என்றார்.