ADDED : செப் 25, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர், செப். 26-
போளுவாம்பட்டி வனத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
பூண்டி காட்டுக்குள் வைத்திருந்த கேமராக்களை ஆய்வு செய்ய சென்றபோது, சிறிய ஓடை அருகே யானையின் எலும்புகள் கிடந்தன. ஆட்கள் எளிதில் நெருங்க முடியாத முட்புதருக்குள் தந்தத்துடன் கூடிய தலை எலும்புகள் கிடந்தன.
டாக்டர் வெண்ணிலா தலைமையிலான குழுவினர் உடற்கூறாய்வு செய்ததில், உயிரிழந்த யானை சுமார், 20 வயதுடையது என்பதும், இறந்து ஒராண்டு ஆகியிருக்கும் என்பதும் தெரிந்தது. ஓடை நீரில் உடல் அடித்து வரப்பட்டபோது எலும்புகள் உடைந்திருக்கலாம் என்றனர்.
